Sunday, January 3, 2010

காத்திருத்தல்















கரிசல் பூமியில்
விரிசல் பார்த்தே
காலம் போய்யாச்சு..!

என் வேர்வை துளிகள்
உறைந்திருந்தால் இது கூட
இமய மலை தான்...!

என் மனக் கண்ணீர்
கறை புரண்டிருந்தால் இது கூட
காவிரி தான்...!

பாதையிலே வைத்த
பார்வைக்கு தான்
பாவை முகம்
பதில் கிடைத்து விட்டால்
பாலை நீ கூட
சோலை தான்...!